Home மலேசியா Awang Rasau என்ற ஆண் புலியின் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள்

Awang Rasau என்ற ஆண் புலியின் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள்

நேற்று ஒரு அறுவை சிகிச்சையின் போது ஐந்து துப்பாக்கித் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ‘Awang Rasau‘என்ற ஆண் மலையன் புலி பெரும் துன்பத்தையும் வேதனையையும் தாங்கியிருக்க வேண்டும்.

10 நாட்களுக்கு முன் குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து தெரெங்கானுவில் 15 வயதுடைய 160 கிலோகிராம் ‘அவாங் ரசாவ்’ மீட்கப்பட்டது. 15 பணியாளர்கள் கொண்ட குழுவினர் ‘அவாங் ரசாவை மீட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிட்டன்) தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாஷிம் தெரிவித்தார். பின்னர் இது சிகிச்சைக்காக பேராக்கிலுள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு மாற்றப்பட்டது.

சட்டவிரோத வேட்டைக்காரர்கள் சுட்டதாகக் கூறப்படும் தோட்டாக்கள் புலியின் பின் கால்களை செயலிழக்கச் செய்துள்ளதாகவும், மேலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் காடிர் கூறினார்.

எக்ஸ்-ரே ஸ்கேன் மூலம் அதன் உடலில் ஐந்து தோட்டாக்கள் இருந்தன. அவை அறுவை சிகிச்சையின் போது வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மற்ற தோட்டாக்கள் அதன் உடலில் ஆழமாக பதிந்துள்ளன. அதனை வெளியில் எடுக்க சிறப்பு கருவிகள் தேவைப்பட்டன.

“அவாங் ரசாவ்” இதற்கு முன்னர் பல முறை சுடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, பழைய காயங்கள் தீவிரமாக இல்லை என்று அவர் கூறினார். அவாங் ரசாவ் மீட்கப்பட்ட பின்னர், பொறுப்பற்ற தரப்பினரால் அதன் மார்பு, வயிறு மற்றும் முதுகில் சுடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version