Home Uncategorized செமினி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 66 மாணவர்கள்

செமினி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 66 மாணவர்கள்

 

செமினி

ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

செமினி தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 25 மாணவர்கள் மழலையர் பள்ளியிலும் முதலாம் ஆண்டில் 66 மாணவர்களும் உற்சாகமாக பள்ளிப் பருவத்தைத் தொடங்கினார். கடந்த 2020ஆம் ஆண்டு மாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மாணவர்களின் எண்ணிக்கை முதலாம் ஆண்டில் சற்று அதிகரித்துள்ளது என பள்ளிப் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயபாலன் லட்சுமணன் கூறினார்.

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு எனும் கோட்பாடுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளியின் மாண்பை உணர்ந்த இளம் பெற்றோர் முதலாம் ஆண்டு மற்றும் பாலர் வகுப்புக்கு தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும் இப்பள்ளி அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளியாகத் திகழ்கிறது. இதனையடுத்து மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மேம்பாடு காணவும் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி அடையவும் முடியும் என இளம் பெற்றோர் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கிடையில் மாணவர்களின் முதல் உதவி சிகிச்சைக்கான அறை, பள்ளி பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் பெறுவதற்கான கடை உள்ளதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version