Home உலகம் சீனாவின் சதியை உலகிற்குக் காட்டிய பெண்

சீனாவின் சதியை உலகிற்குக் காட்டிய பெண்

-சிறையில் தொடரும் போராட்டம்.!!!

சீனாவில் கொரோனா சதியை உலகிற்குக் காட்டிய ஜாங் ஜான் சிறிதும் தளராமல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானது சீனாவின் வுஹான் நகரில் தான் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் கணக்கிடப்பட முடியாத அளவிற்கு மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமன்றி உலகத்தின் அனைத்து பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. சீனாவிற்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்னரே தெரிந்து இருந்த நிலை அதனைப்பற்றி எவ்வித எச்சரிக்கையையும் விடுக்காமல் விட்டு மிகப்பெரிய விளைவை மனித இனத்திற்கே ஏற்படுத்தி தந்துள்ளது.

சீனாவில் உருவாகிய இந்த கொரோனா வைரஸ் பற்றி வெளியிட்ட செய்தி தொடர்பாளர் ஜாங் ஜான் சீனா அரசல் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் தற்போது அவர் மிக பலவீனமடைந்துள்ளார் எனவும் சிறையிலிருந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட வில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில் வுஹானில் உள்ள மருத்துவமனை நடைபாதையில் நோயாளிகள் வரிசையாக நின்று கொண்டிருந்ததை ஜாங் பார்த்துள்ளார்.

அவர் மருத்துவமனையை படம் பிடிப்பதை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரியை ஜாங் அமைதியாக கையாண்டார் . அதன்பிறகு “அரசாங்கத்தை கண்காணிப்பது எனது உரிமை “என்று அவர் தெரிவித்தார். இதனிடையில் சீன அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தை ஜாங் எடுத்து காட்ட மேற்கொண்ட முயற்சிகளும் நடவடிக்கைகளும் அவருக்கு மிகப்பெரிய துன்பத்தை கொடுத்துள்ளது. ஜாங் ஜான் சீன அரசால் மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் 37 வயதான ஜாங்சனுக்கு 7 மாதங்களுக்கு பின் சண்டைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கிய காரணத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர் . இவ்வாறு தான் செய்யாத குற்றத்திற்காக எனக்கு அளிக்கப்பட்ட சட்டவிரோதமான தண்டனையை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.அதனால் மிகவும் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு ஜாங் இருப்பதாக வழக்கறிஞர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ஜாங் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து சட்ட விரோத தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் எனது இந்த போராட்டத்திற்கு நானே உறுப்பினர் என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் கட்டாயபடுத்தி நாசி குழாய்கள் வழியாக உணவு அளிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சீன அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானவை எனவும் தனி மனித உரிமையை மீறும் வகையில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Previous articleஜி.இ. 15 இல் எம்.சி.ஏ – பி.என்ஐ ஆதரிக்கும் – டாக்டர் வீ
Next articleகட்டளைகளை மீறிவிட்டனர். இரு நாட்டு எல்லையில் பரபரப்பு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version