Home உலகம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்

– ஐ.நா. வேதன

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டெரேஸ் பேசும்போது, ‘ உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை அடைவார்கள்.

கரோனா, கால நிலை மாற்றம் வறுமையை தீவிரப்படுத்தியுள்ளது. நீங்கள் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். பஞ்சமும், பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை. அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன’ என்று வருத்தம் தெரிவித்தார்.

Previous articleகோலலங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் 500 மாணவர்களுக்கு புத்தகப்பைகள்
Next articleகோவிட் தொற்று பாதிப்பு 1,345 – மீட்பு 1,782

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version