Home Uncategorized இபிஎஃப் சேமிப்பு பாதுகாப்பாக உள்ளது

இபிஎஃப் சேமிப்பு பாதுகாப்பாக உள்ளது

அச்சம் வேண்டாம்!

இபிஎஃப் எனப்படும் ஊழியர் சேமநிதி சேமிப்புப் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அதன் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஐ-சினார் பண மீட்பில் ஸ்கேம்மர்ஸ் மற்றும் ஹெக்கர்ஸ் ஊடுருவி பணத்தை அவர்களின் கணக்கிற்குத் திசை திருப்பி விடலாம் என்ற அச்சம் இபிஎஃப் உறுப்பினர்கள் மத்தியில் அண்மைக் காலமாக தலையெடுத்திருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள் நவீனமாகவும் பக்காவாகவும் இருப்பதால் ஸ்கேம்மர்ஸ் மற்றும் ஹெக்கர்ஸ் போன்றவர்களால் ஊடுருவ முடியாது என்று இபிஎஃப் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இந்த மோசடிப் பேர்வழிகளின் அநியாய- அட்டூழிய நடவடிக்கைகளில் இருந்து தன்னுடைய சந்தாதாரர்களின் சேமிப்புக் கணக்குகளைப் பாதுகாப்பதற்கு துறை சார்ந்த அமலாக்கப் பிரிவினர்களுடன் இபிஎஃப் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.

சந்தாதாரர்களின் சேமிப்புக் கணக்கில் மோசடியாகக் கைவைக்க முயற்சி செய்யும் நாசக்கார பேர்வழிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் இபிஎஃப் உறுதி ஙெ்ய்திருக்கிறது.

இந்நிலையில் ங்ந்தாதாரர்களும் உரிய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இபிஎஃப் கேட்டுக் கொண்டுள்ளது. இரு தரப்பின் அணுக்கமான ஒத்துழைப்பின் வழியே ஸ்கேம்மர்ஸ் மற்றும் ஹெக்கர்ஸ் மோசடிப் பேர்வழிகளின் ஊடுருவலை முறியடிக்க முடியும் என்று இபிஎஃப் நிர்வாகம் நம்புகிறது.

ஐ-சினார் (டிகுடிணச்ணூ) திட்டத்தின் கீழ் தங்களின் சேமிப்பில் இருந்து பணத்தை மீட்பதற்கு விண்ணப்பிக்கும்போது சந்தாதாரர்கள் வெகு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தங்களின் விவரங்கள் மற்றவர்களுக்குக் கசியாமல் இருப்பதற்கு அவை ரகசியமாக இருப்பதை ச்சந்தாதாரர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

சேமிப்புப் பணத்தை மீட்பதற்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் உதவியை நாடும்போதுதான் இந்த விபரீதம் தலையெடுக்கிறது என்பதை இபிஎஃப் சந்தாதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தங்களின் சேமிப்புக் கணக்கு, சுய குறிப்புகள் பற்றிய எந்தத் தகவலும் மற்றவர் பார்வையில் படவே கூடாது. தெரியாதவர்கள் இபிஎஃப் அலுவலகங்களுக்குச் சென்று உதவி கேட்கலாம். கண்டிப்பாக சரியான முறையில் அவர்கள் செய்து கொடுப்பார்கள். பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

ஐ-சினார் வழி தன்னுடைய இபிஎஃப் கணக்கில் இருந்து ரொக்கப் பணம் மீட்பதற்கு அதிகாரம் பெற்றிராத ஒருவர் முயற்சி செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட ஷா ஆலமைச் சேர்ந்த ஓர் 28 வயது உதவி தாதி அது குறித்து போலீசில் புகார் செய்திருக்கிறார்.

தன்னுடைய மைகார்டு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்த மோசடிப் பேர்வழி பயன்படுத்தி இருப்பதையும் அப்பெண் கண்டுபிடித்திருக்கிறார். மேலும் ஐ-அக்கவுன்  கணக்கைப் பரிசோதித்துப் பார்த்ததில் இபிஎஃப் ஐ-லெஸ்தாரி திட்டத்தின் கீழ் தனக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு வங்கிக் கணக்கு தரப்பட்டிருப்பதையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

இத்தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட அந்நபரின் அடையாளத்தை அப்பெண் தெரிந்து கொண்டார். அந்நபர் இவருக்கு அறிமுகமே இல்லாதவர் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

அப்பெண்ணின் வங்கிக் கணக்கு எண்ணும் சமர்ப்பிக்கப்பட்ட மோசடிப் பேர்வழியின் வங்கிக் கணக்கு எண்ணும் முரண்பட்டிருந்ததால் இபிஎஃப் நிர்வாகம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறது. அப்பெண்ணின் பணமும் தப்பியது.

அந்நபர் தற்போது போலீஸ் புலனாய்வு வலையில் சிக்கி இருப்பதாக ஷா ஆலம் போலீஸ் தலைவர் ஏசிபி பஹாருடின் மாட் தாய்ப் கூறியிருப்பது இபிஎஃப் அளித்திருக்கும் உத்தரவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.

சந்தேகப்படும்படியான அம்சங்கள் தென்பட்டால் இபிஎஃப் சந்தாதாரர்கள் ஹாட்லைன் 03-89224848 அல்லது இபிஎஃப் தொடர்பு நிர்வாக மையம் 03-89226000 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
– பி.ஆர். ராஜன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version