Home Uncategorized இன்ஸ்பெக்டர் கணேசனின் தமிழ்ப்பற்று அளப்பரியது

இன்ஸ்பெக்டர் கணேசனின் தமிழ்ப்பற்று அளப்பரியது

 

ஈப்போ-

இந்தியர்கள் தமிழ்ப் படித்த சமுதாயமாக மாறவேண்டும் . தமிழில் தரமான கல்வியைப்பெறவேண்டும் எனும் வேட்கையில் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு மக்கள் ஓசை நாளிதழ்களை வழங்கும் கல்வித் திட்டத்திற்கு மூவார் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவியல், புலனாய்வுப்பிரிவு சட்டத்துறை இன்ஸ்பெக்டர் கணேசன் உதவியிருக்கிறார்.

இவர், மேகநாதன்-ரஞ்சிதம் தம்பதியரின் மூத்த புதல்வர். இவர்தம் மூன்று உடன்பிறப்புகளும் கெடா, பாடாங் செராய் தமிழ்ப்பள்ளியில்  ஆரம்பக்கல்வியைப் தொடங்கியவர்கள்.

21 ஆண்டுகள் காவல்துறையில் அதிகாரியாக கணேசன் கங்கார் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தொடர்புத்துறை அதிகாரியாக சேவையாற்றிய தொடர்பில் 90 மாணவர்கள் கொண்ட அப்பள்ளியை மக்கள் ஓசைநாளிதழின் கல்வித் திட்டத்திற்கு தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைப் தொடங்கிய உடன்பிறப்புகளான தம்பி மலேசிய ராணுவ படையிலும் தம்பி ஆசிரியராக பணிபுரிவதாக அவர் கூறினார். எனவே தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப ஒருபோதும் தயக்கம் வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

பல இடர்களுக்கிடையில் தமிழ்மொழி இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் தமிழை நம்பி பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் இந்தியப் பெற்றோரே என்றார் கணேசன்.

அவர்கள்தான் தமிழ்மொழியின் முதல்காவலர்கள் என்பது கருத்தில் கொள்ளக்கூடிய ஒன்று என்று ஆணித்தரமாக கூறிய கணேசன் மக்கள் ஓசையின் செயல் அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நாளிதழ் வழங்கும் விண்ணப்பப் பாரத்தை ஒப்படைத்தார். ஆறு மாதங்களுக்கான கட்டணத்தை இன்ஸ்பெக்டர் கணேசன் வழங்கியிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version