Home Hot News பொய்செய்திகள் புலிவால் பிடித்த கதையாகிவிடும்!

பொய்செய்திகள் புலிவால் பிடித்த கதையாகிவிடும்!

 

ஊடக வசதிகள் கையில் இருப்பதால் எதையும் செய்தியாக்கிவிடலாம் என்பது புலிவால் பிடித்த கதையாகிவிடும் . பல வேளைகளில் தவறான , உண்மையல்லாத செய்திகளால் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை கேள்விப்ப்ட்டிருந்தும் மீண்டும் மீண்டும் அதே போன்ற தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

அண்மையில் நம்ப முடியாத செய்தி ஒன்று பரவியிருக்கிறது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டாலே இதன் பொய்த்தனமை தெரிந்துவிடும்.

கறுப்பு கண்ணாடி அணிந்த வாகனமோட்டிக்கு 500 வெள்ளி அபராதம் என்பதுதான் அச்செய்தி. இதுவரை கேள்விப்படாத செய்தி இது. உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்பதற்கு யூகங்களைவிட  சரியான பதில் தருகிறார் புக்கிட் அமான் போகுவரத்துப் புலனாய்வு நடவடிக்கைப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஹுஷேன் .

இது குறித்து ஆராய்ந்ததில்  இது பொய்யான தகவல் என்றும் . அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை என்கிறார் அவர். இது உண்மைக்குப் புறம்பான செய்தி. 

கார், அல்லது வாகனங்கள் செலுத்துகின்றவர்கள் கறுப்புக்கண்ணாடி அணிவது குற்றப்பட்டியலில் இல்லை. ஆதலால் வீண் அவதூறுகளை நம்பவேண்டாம் என்கிறார் அவர்.

Previous articleவிபத்தில் பெண் யானை பலி
Next articleஜெட் ஸ்கை சவாரி செய்த ஆடவரின் உடல் கண்டுபிடிப்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version