Home உலகம் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த கணவன்..

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த கணவன்..

-மனைவிக்குக் கிடைத்த துண்டுசீட்டு – நிர்வாகத்தின் சதிச்செயல்.!!

கணவரின் இறந்த அறையில் இருந்த துண்டுசீட்டு அவரின் மரணத்திற்கான காரணத்தை மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளது

இலங்கையைச் சேர்ந்த சோனியா பிரவுன் என்ற பெண் தன் கணவனுடன் பிரிட்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

அவர் கணவன் இறந்து போன நிலையில் அவரது அறையில் உள்ள ஒரு சோபாவில் துண்டுச்சீட்டு ஒன்று கிடந்தது. அதனை எடுத்த சோனியா என்ன என்று பார்க்கும்போது அது துண்டு சீட்டு இல்லை ஆவணம் என தெரியவந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி சோனியாவை அதிர்ச்சியடையச் செய்தது.

அந்த ஆவணத்தின் பெயர் Do Not Attempt CPR(DNACPR). இந்த ஆவணம் எந்த நோயாளியின் படுக்கையில் இருக்கிறதோ அவருக்கு இதய அடைப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினால் உயிர்காக்கும் சிகிச்சையான CPR கொடுக்க கூடாது என்பதை கூறும் ஆவணமாகும்.

ஆனால் மருத்துவர் அந்த ஆவணத்தை கொடுக்க வேண்டுமெனில் உறவினர்களின் சம்மதத்துடன் தான் கொடுக்க வேண்டும்.

ஆனால், சோனியா சம்மதம் அளிக்கவில்லை. தனது கணவர் இறந்ததற்கு DNACPR ஆவணம் தான் காரணம் என்றும் அது கொடுக்கப்படாமல் இருந்தால் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்காது எனவும் பொதுநல ஆய்வு நிறுவனத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் முதியோர் காப்பகத்தில் 508 பேருக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தது.

இது மனித விதிமீறல் என்பதால் பிரச்சினை பெரிதாக இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version