Home Hot News தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமா.. எத்தனை விருதுகள்.. யார் யாருக்கு..

தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமா.. எத்தனை விருதுகள்.. யார் யாருக்கு..

சென்னை: சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் எனதேசிய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது தமிழ் சினிமா.

67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட வேண்டிய இந்த விருதுகள் கொரோனா லாக்டவுன் காரணமாக ஓராண்டு தாமதத்திற்கு பிறகு  அறிவிக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியான போதும், குறிப்பிடத்தக்க சில படங்கள் மக்களின் கவனத்தை பெற்றது.


அசுரன் படத்திற்கு..

இந்நிலையில் அவற்றில் சிறந்த படைப்புகளை மத்திய அரசு தனது உயரிய விருதான தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. அதன்படி சிற்நத தமிழ் படத்திற்கான தேசிய விருதை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த நடிகருக்கான விருதுக்கு அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை நடிகராக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி இமானுக்கு விருது

இதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக டி இமான் சிறந்தா இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஒத்த செருப்புக்கு 2 விருதுகள்

இதேபோல் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை குவித்துள்ளது. சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டியும் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதையும் ஒத்த சிறப்பு திரைப்படம் பெற்றுள்ளது.

குழந்தை நட்சத்திரம்

கேடி கருப்பு படத்தில் நடித்ததற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

மொத்தம் 7 விருதுகள்

2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதில் அசுரன் படம் இரண்டு விருதுகள், ஒத்தசெருப்பு திரைப்படம் 2 விருதுகள், டி இமான் மற்றும் விஜய் சேதுபதி, குழந்தை நட்சத்திரம் நாக விஷால் தலா ஒரு விருது என மொத்தம் 7 விருதுகளை வாங்கி குவித்துள்ளது தமிழ் சினிமா.

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version