Home இந்தியா கமல் மீது புத்தகங்களை ஆவேசமாக வீசிய பெண்

கமல் மீது புத்தகங்களை ஆவேசமாக வீசிய பெண்

 – பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு!!

மோடியா? இந்த தாடியா? என மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும் என்று கமல் ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழ்மையை அரசியல் கட்சிகள் பேணி பாதுகாத்து வருகின்றன. அதனால் தான் ஏழ்மை மீது எனக்கு கோபம் ஏற்படுகிறது.

நேர்மை பசிபோல்  இருக்க வேண்டும். நாள்தோறும் நேர்மையாக இருக்க வேண்டும். நான் உதயநிதி தயாரிப்பில் படம் நடித்துள்ளேன். அதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? தமிழில் வசனம் எழுத ஆள் இல்லை; அதனால் வட நாட்டிலிருந்து, தேர்தல் வெற்றிக்கு ஒரு ஆள் அழைத்துவரப்பட்டுள்ளார்” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “லேடியா? மோடியா? என ஜெயலலிதா கேட்டார். நான் கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? மத்திய அரசை துணிச்சலோடு கேள்வி கேட்க ஆள் வேண்டும். என்னை பீ டீம் என சித்தரித்துள்ளது திமுக. திமுக வெற்றிபெற்றால் மத்திய அரசுக்கு கைகட்டி வேலை பார்ப்பார்கள். இலவசங்கள் ஏழ்மையை போக்காது” என்றார்.

கமல் பேசி முடித்ததும் கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டபடி கையில் இருந்த புத்தகங்களை கமலை நோக்கி தூக்கி வீசினார். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த பவுன்சர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

அத்துடன் அங்கு நடந்தவற்றை படம் பிடிக்காமல் இருக்க பத்திரிகையாளர்களைth தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version