Home இந்தியா 6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்

6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்

அந்த மனசுதான் கடவுள் -குவியும்      பாராட்டுக்கள்..

கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

கேரளாவில் கோடை கால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூபாய் 6 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜன்சியில் ஸ்மிஜா மோகன் என்ற பெண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளார்.

இவரிடத்தில் சந்திரன் என்பவர் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும் சந்திரன் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்குவதும், பின்னர் பணத்தை திருப்பி கொடுப்பதும் வழக்கம். அந்த வகையில் சந்திரன் ஸ்மிஜா மோகனுக்கு கால் செய்து, கோடைகால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு தனக்கு ஒன்று வேண்டும் எனவும், பணத்தை நேரில் பார்க்கும்போது தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ஸ்மிஜா மோகனும் எஸ்.டி 316142 என்ற லாட்டரி ஷீட்டை சந்திரனுக்காக எடுத்து வைத்துத்துள்ளார். இந்நிலையில் சந்திரனுக்காக ஸ்மிஜா மோகன் எடுத்துவைத்த லாட்டரி சீட்டிற்கு 6 கோடி பரிசு விழுந்துள்ளது.

இதனை அடுத்து ஸ்மிஜா மோகன் சந்திரனுக்கு போன் செய்து விவரத்தை கூறி, அந்த லாட்டரி சீட்டை சந்திரனிடமே ஒப்படைத்தார்.

பரிசு விழுந்த ஷீட்டு தன்னிடமே இருந்தும் கூட, ஸ்மிஜா மோகன் நினைத்திருந்தால் அந்த லாட்டரி ஷீட்டு தனதுதான் என கூறி அந்த பரிசினை பெற்றிருக்க முடியும்.

ஆனாலும் அந்த நேரத்தில் மிகவும் நேர்மையாக நடந்துகொண்டு, அந்த ஷீட்டை சந்திரனிடம் ஒப்படைத்த ஸ்மிஜா மோகனுக்கு தற்போது பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் பள்ளி ஒன்றில் பூங்கா பராமரிப்பாளராக பணி புரிந்துவரும் சந்திரன் அந்த லாட்டரி ஷீட்டை குட்டம சேரி பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியில் டெபாசிட் செய்தார்.

ஏற்கனவே மிகவும் ஏழ்மையில் வளந்துவரும் சந்திரனுக்கு இந்த பம்பர் பரிசு, அவரை ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாற்றியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version