Home இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் 62,336 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 62,336 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. 160 நாட்களுக்குப் பிறகு புதிய உச்சமாக ஒரே நாளில் 60 ஆயிரம் பேரை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 62,336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 289 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரல் 2020ஆம் ஆண்டில் உலகம் முழுவதையும் தனது கைப்பிடியில் வைத்திருந்தது. 12.50 கோடி பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 10 கோடி பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ப்27 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி முதல் உலகத்தின் பல நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் வரை லாக்டவுன் முழுவதுமாக அமலில் இருந்தது பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரியும் ஒரு லட்சம் பேரை தொட்டது.

கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்த பின்னர் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டன. தியேட்டர்கள், பார்க், கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது.

தினசரியும் 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் தினசரியும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 112 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மும்பை நகரத்தில் மட்டும் 5,515 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் 3176 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரே நாளில் 59 பேர் மரணமடைந்துள்ளனர். குஜராத் மாந்லத்தில் 2190 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 5 நாட்களாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று 20ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5.5 கோடி பேர் வரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 234 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோலி, ஈஸ்டர், ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version