மியன்மார் ஆயுதப் படைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் குறைந்தது 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் போக்கிற்கு மியன்மா

ரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் போராளி அமைப்புகள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இனி ஓர் ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்தாலும்கூட பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் மியன்மார் பாதுகாப்புப் படையினருக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஷான் மாநில மீட்புப் போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க் சூளுரைத்துள்ளார்.

தாய்லாந்து எல்லை அருகில் இயங்கும் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என உறுதி அளித்துள்ளது. அதே போல பல போராளி அமைப்புகளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

———————