Home உலகம் 2036 வரை புடின் மட்டுமே ரஷ்ய அதிபர்!

2036 வரை புடின் மட்டுமே ரஷ்ய அதிபர்!

-புதிய உத்தரவில் கையெழுத்து

மாஸ்கோ:
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய 3வது பதவிக் காலம் வரும் 2024ல் முடிகிறது. இந்நிலையில், இந்த பதவிக்காலம் முடிந்த பிறகும் மேலும் 12 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதற்கான சட்டத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.
இதன்மூலம், வரும் 2036 ஆம் ஆண்டு வரையில் இவரே அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் 2 அதிபர் பதவிக்கான தேர்தலிலும் இதன்மூலம் இவர் போட்டியிடலாம்.

கடந்தாண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூலையில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்ற  உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதேபோல், மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், அதன் அதிபர் ஜி ஜின்பிங்கே வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version