Home உலகம் இந்தியா மீது சைபர் அட்டாக் நடத்தும் சக்தி

இந்தியா மீது சைபர் அட்டாக் நடத்தும் சக்தி

 – சீனாவுக்கு இருக்கிறது- பிபின் ராவத்

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அவற்றையெல்லாம் நமது நட்புநாடுகள் பாதிக்கப்படாத வகையில் முறியடிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இணையவழி (Cyber) பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் மீதான முதலீட்டை சீனா அதிகளவில் செய்கிறது.

பல ஆண்டுகளாக நமக்கும் அவர்களுக்கும் இடையே தொழில்நுட்பத்திறன் அளவில் இடைவெளி இருக்கிறது. எனவே இந்தியாவை விட சீனா தொழில்நுட்ப ரீதியில் முன்னிலையில் உள்ளது என்பது உண்மை தான்” என வெளிப்படையாக பேசியிருக்கிறார் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.

விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை (Vivekananda International Foundation) சார்பாக, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “இந்தியாவின் மீது இணையவழி தாக்குதல் (Cyber Attack) நடத்தும் ஆற்றல் சீனாவுக்கு உள்ளது. அவ்வாறு நடத்தப்பட்டால் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை இந்தியத் துறைகள் சந்திக்கும்.

எனவே, இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற சைபர் அட்டாக் பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து, அதனை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து தப்புவதற்குமான தடுப்பு அரண்களை (Firewall) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

சைபர் தாக்குதல் நடந்தால், அதன் பாதிப்பு நீண்ட காலம் நீடிக்காத வகையில் தடுக்கும் திறன் கொண்டதாக நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் (Tri-Service Cyber Defence Agency) இருக்கும் உறுதியாக கூறுகிறோம்” என தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அவற்றையெல்லாம் நமது நட்புநாடுகள் பாதிக்கப்படாத வகையில் முறியடிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக நாம் மேற்கத்திய நாடுகளை சார்ந்திராமல், மற்ற நாடுகள் நம்மை பார்த்து பாடம் கற்பிக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னுதாரணமாக வளர்ச்சிபெற வேண்டும்” என பிபின் ராவத் கூறினார்.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவை பின்புலமாக கொண்டு செயல்படும் ரெட் எகோ” (Red echo) எனும் அமைப்பு, இந்தியாவின் டெல்லி, மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள மின் நிலையம், துறைமுகம் முதலான 10 முக்கிய துறைகளின் மீது சைபர் தாக்குதல் நடந்தியிருப்பதாக அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் “ரெக்கார்டட் ஃபியூச்சர்” (Recorded Future) எனும் நிறுவனம் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முப்படைத் தளபதி பிபின் ராவத் பேசியிருப்பது, இந்தியாவின் இணைய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்தியாவின் இணையப் பாதுகாப்பு .  இறையாண்மைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு டிக் டாக், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version