Home இந்தியா இலவசமாக சிலம்பப் பயிற்சி

இலவசமாக சிலம்பப் பயிற்சி

 –கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!

வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன். இந்த தம்பதியினர் கரியாப்பட்டினம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.

தனது கடையில் டீ மாஸ்டராக இருப்பவர் மாலா. இவரின் தந்தை கணேசன் வேதாரண்யம் அடுத்த மனிதன்தீவில், சிலம்ப ஆசிரியராக இருந்து கடந்த 40 ஆண்டுகளாக சிலம்பக் கலையை கற்று கொடுத்து வந்துள்ளார்.

தனது தந்தை சிறுவயதில் தனக்கு கற்றுக்கொடுத்த சிலம்பக்கலையை தானும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்று நினைத்து தனது கணவனின் ஒத்துழைப்போடு கரியாப்பட்டினத்தில் உள்ள தனது டீ கைக்கு அருகில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு நாள்தோறும் மாலை வேளைகளில் சிலம்பம் மற்றும் கோலாட்டம் ஆகியவற்றை இலவசமாக கற்றுத் தருகிறார்.

பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வரவைக்கும் நோக்கத்தோடு சிலம்பத்தை ஆர்வத்துடன் கற்றுத் தருகிறார் . இதுகுறித்து அவர் கூறுகையில், சிலம்பக் கலையை பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது தனக்கு மனநிறைவை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளாக இலவசமாக சிலம்பம் கற்றுத் தரும் ஆசிரியை மாலாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version