Home உலகம் கறுப்பின அமெரிக்க ராணுவ மருத்துவர் மீது அபாண்டம்!

கறுப்பின அமெரிக்க ராணுவ மருத்துவர் மீது அபாண்டம்!

துப்பாக்கி முனையில் கைது செய்த காவலர்

அமெரிக்காவின் வின்ட்சோர் ( Windsor) நகரத்தில் ராணுவ மருத்துவராக பணிபுரியும் கறுப்பின இளைஞர் மீது, அமெரிக்க போக்குவரத்துத்துறை அதிகாரி இனவறியை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி, அமெரிக்காவின், வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள வின்ட்சோரில், ராணுவ மருத்துவரக பணிபுரியும் கறுப்பின இளைஞர் கரான் நசரியோ ( Caron Nazario), காரில் சென்றார். அருகில் இருக்கும் எரிவாயு நிலையத்திற்கு சென்றபோது, ஜோ குட்டரேஸ் (Joe Gutierrez) என்ற போக்குவரத்துத்துறை காவலர் துப்பாக்கியைக் காட்டி, நசரியோவின் காரை நிறுத்தச் சொல்லி உள்ளார்.

காவல்துறை அதிகாரி- காரின் கதவைத் திறந்து .. இப்போதே இறங்கு என்றார்.

நசரியோ- நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்

காவல்துறை அதிகாரி: இப்போதே காரைவிட்டு இறங்கு..

நசரியோ- இந்த நாட்டுக்கு சேவை செய்யும் மருத்துவரை இப்படிதான் நீங்கள் நடத்துவீர்களா?

நான் எந்த தவற்றையும் செய்யவில்லை.

(இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே காவல்துறை அதிகாரி ஜோ குட்டரேஸ் அவர் மீது பெப்பர் ஸ்பிரேவை அடிக்கிறார். மீண்டும் காரிலிருந்து இறங்கச் சொல்கிறார்.)

நசரியோ- நான் கொஞ்சம் சுவாசித்து கொள்கிறேன்.

காவல்துறை அதிகாரி- நான் உனக்கு கட்டளையிடுகிறேன். நீ அதற்கு கீழ்படிய வேண்டும்.

நசரியோ- காரிலிருந்து இறங்குவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. நான் சட்டரீதியாக எந்த தவற்றையும் இழைக்கவில்லை.

காவல்துறை அதிகாரி- போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், உன்னை கைது செய்ய, காரிலிருந்து இறங்கச் சொல்கிறேன். மேலும் எங்களுக்கு நீ ஒத்துழைக்கவில்லை.

நசரியோ- போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ஏன் காரிலிருந்து இறங்க வேண்டும். என் மீதிருந்து கையை எடுங்கள். தயவு செய்து என் மீதிருந்து கையை எடுங்கள்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை காவலர், நசரியோவை வலுக்காட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுக்கிறார். தொடர்ந்து அவர் முதுகின் மீது காலால் அழுத்தி, அவரது கைகளை பின்புறமாகக் கட்டி விளங்கிடுகிறார் .

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு நடந்திருந்தாலும், இதுதொடர்பான வீடியோவை இப்போதான் நசரியோ வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 2 (2021) அன்று நசரியோ வழக்குப் பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து போக்குவரதுத்துறை காவலர் ஜோ குட்டரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட், என்பவரை காவல்துறை அதிகாரி, கால் முட்டியால் அழுத்தி கொலை செய்தார். இந்த சம்பவம், மிகப்பெரிய போராட்டத்தைத் தூண்டியது. இதைத்தொடர்ந்து, இதுபோல் நடைபெறும் இனவெறிக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

 

 

கமெண்ட்: அமெரிக்காவை கறுப்பினத்தான் ஆளும் நிலை வந்தால் வெள்ளையை பாதத்தின் அடியில் தானே பார்க்க முடியும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version