Home Uncategorized உங்களுக்கு பாத வெடிப்பா கவலை வேண்டாம்

உங்களுக்கு பாத வெடிப்பா கவலை வேண்டாம்

 -இதோ இயற்  கை  வைத்தியம்.

பாத வெடிப்பு என்பது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில்., புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். பாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும்., உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது.

நாள்தோறும் உறங்குவதற்கு முன்னதாக பாதத்தில் மாய்சுரைசர் அல்லது வாசலினை தடவிய பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்கினால் பாதங்கள் மிருதுவாகி பளபளப்பாக மாறும்.

தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்., நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறைய துவங்கும்.

பப்பாளி பழத்தினை நன்றாக அரைத்து., பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பானது மறைந்துவிடும்.

மருதாணியின் இலைகளை நன்றாக அரைத்த பாத வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பானது உடனடியாக குணமாகும்.

எலுமிச்சை சாறு, கிளிசரின், பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும். கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன்  ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

மேலும், பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.

இது உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம்.

 

கமெண்ட்:  இயற்கை  கைவசம் இருக்க . கை  வசப்பட வேண்டும் அல்லவா! அழகு என்பது அழுக்கை நீக்குவதாகும்! அப்படி நீக்கினால் இயற்கை வசப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version