Home இந்தியா விவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு.

விவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு.

 -நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்து உரிய சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17  ஆம் தேதி உயிரிழந்தார்.

தடுப்பூசியால் தான் விவேக் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தன. ஆனால், தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென என சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.

அதை ஏற்க மறுத்த நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியால் தான் விவேக் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது சர்ச்சையைக் கிளப்பியது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே போல, விவேக் மரணம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக மன்சூர் அலி கான் மீது சென்னை மாநகராட்சி தரப்பிலும் டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.

அந்த புகார்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version