Home Uncategorized பள்ளிக்கூட இணைப்பாட நடவடிக்கை பதிவுகளில் இன பிரதிபலிப்பு ஏன்?

பள்ளிக்கூட இணைப்பாட நடவடிக்கை பதிவுகளில் இன பிரதிபலிப்பு ஏன்?

துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் கேள்வி!

பள்ளிக்கூடங்களில் இணைப்பாட நடவடிக்கைகளுக்கான பதிவுக்கு இன நிபந்தனை பத்துபகாட்டில் உள்ள டத்தோ பெந்தாரா லுவார் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தில் விதிக்கப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் தனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் ஜோகூர் மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் நடக்கவே கூடாது என்று அந்தப் பள்ளிக்கூட முதல்வருக்கும் மாநில கல்வித்துறைக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து ஜோகூர் மக்களுக்குமான ஒரே அடையாளத்தின் கீழ் இனங்களுக்கிடையே ஒற்றுமையை விதைக்கும் பங்சா ஜோகூர் கோட்பாட்டிற்கு ஏற்ப இதுபோன்ற நடவடிக்கைகள் அமையவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் ஒருமைப்பாட்டையும் சுபிட்சத்தையும் நிலைநிறுத்த இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

முன்னதாக சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளியின் முதல்வர் அப்துல் ரசாக் ஹமிட், பத்து பகாட் மாவட்ட அதிகாரி இஸ்மாயில் அபு, ஜோகூர் கல்வித்துறை துணை இயக்குநர் சஹிலோன் அப்துல் ஹலிம், பத்துபகாட் மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர் சுஹாய்மி இஸ்மாயில் ஆகியோர் துங்கு இஸ்மாயிலைச் சந்தித்தனர்.

இன, பாலியல் ரீதியாக இணைப்பாட நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டது குறித்து அப்பள்ளி முதல்வர் அப்துல் ரசாக் நேற்று முன்தினம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version