Home Uncategorized தமிழ்த் தாய்க்கு மணிமகுடம்

தமிழ்த் தாய்க்கு மணிமகுடம்

மக்கள் ஓசையின்  பயணம் போற்றத்தக்கது !

மலாக்கா-

மலேசிய இந்தியர்களின் இதயக் குரலாக வலம் வரும் மக்கள் ஓசை இல்லந்தோரும் மக்கள் ஓசை எனும் சிறந்தொரு வாசிப்புத் திட்டத்தின் வழி நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளை நோக்கிய பயணம் தமிழ் தாய்க்கு மணிமகுடம் சூட்டும் உன்னத திட்டமாக அமைந்துள்ளது என வழக்கறிஞர் டத்தோ இரா, இராஜேகரன் புகழாரம் சூட்டினார்.

தமிழ் நாளிதழ் வாசிக்கும் நற்பண்மை நமது பண்பாடாக வளர்த்தேடுக்க வேண்டும். அவ்வகையில் மக்கள் ஓசை முன்னேடுத்திருக்கும் நாளிதழ் வாசிப்பு திட்டம் போற்றதக்கது என்றார் அவர்.

ஜாசின் , டைமன் ஜுப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனது சார்பில் நாள் தோரும் 5 நாளிதழ் என ஒன்பது மாதத்திற்கான நாளிதழ் செலவை அவர் ஏற்றுக் கொண்டார்.

தொண்மையான மொழிகளில் ஒன்றாக திகழும் தமிழ் மொழி படிபதற்கும் பேசுவதற்கும் நாம் பெருமைக் கொள்ள வேண்டும். மொழியும் இனமும் அளியாமல் இருக்க தமிழ்ப்பள்ளிகள் நமக்கு அஸ்திவாரமாக விளங்குகிறது.

அதே வேளையில் தமிழ் மொழியை தாங்கி பிடிக்கும் ஆழமரமாக திகழும் மக்கள் ஓசை தொடர்ந்து சமுதாயப் பணியுடன் மொழிப்பணியையும் வெற்றிக்கரமாக செயல்படுத்த அதிகமானோர் உதவிகரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தாய் தமிழுக்காக நாம் ஆற்றும் தொண்டு நமது தாயிக்கு செய்யும் சேவைக்கு சமமாக விளங்குகிறது என்றார்.

மாணவர்கள் தினமும் தவறாமல் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். நாளிதழ் படிப்பதின் வழி பொது அறிவு வளர்த்து வாழ்வில் முன்னேற்றத்தை அடையலாம். மக்கள் ஓசையில் தினந்தோரும் மாணவர்களுக்காக பிர்த்தியே பக்கமாக வரும் சிறப்பு கட்டுரைகள்,கதைகள் ,கவிதைகள் மாணவர்கள் பயன்மிக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களும் தங்கள் படைப்புகளை மக்கள் ஓசைக்கு அனுப்பி உங்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளி கொணர வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சம்மேளம்  தேசியத் துணைத் தலைவருமான டத்தோ இராஜசேகரன் கூறினார்.

டைமன் ஜுப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வேனி இராஜேந்திரன் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய டத்தோ இராஜசேகரனுக்கும் மக்கள் ஓசை நிர்வாகத்திற்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

-ரெ .மாலினி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version