Home மலேசியா எரிப்பொருள் விலையில் மாற்றம்

எரிப்பொருள் விலையில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா: மே 6 முதல் 12 வரை RON97 பெட்ரோல் விலை இரண்டு சென் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. RON97 பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு RM2.58 இலிருந்து RM2.60 ஆக உயரும்.

RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, சந்தை விலைகள் அதிகரித்த போதிலும், அதன் தற்போதைய உச்சவரம்பு விலை RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்றும் அமைச்சகம் கூறியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் (ஏபிஎம்) கீழ் வாராந்திர எரிபொருள் விலை பொறிமுறை ஜனவரி 5, 2019 அன்று மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Previous article3 முன்னாள் போலீஸ்காரர்களை விசாரணைக்காக எம்ஏசிசி தேடுகிறது
Next articleகடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றினால் 17 பேர் மரணம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version