Home மலேசியா போலீசாரை மோசமாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்த பெண் கைது

போலீசாரை மோசமாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்த பெண் கைது

புத்ராஜெயா: முகநூலில் சாலைத் தடுப்புகளை நிர்வகிக்கும் காவல்துறையினர் குறித்து மோசமான மற்றும் அச்சுறுத்தும் பதிவுகள் செய்ததாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

“Diana Mat” என்று அழைக்கப்படும் முகநூல் கணக்கு வைத்திருப்பவர் குறித்து போலீசார் அளித்த புகாரினை தொடர்ந்து, 36 வயதான சந்தேக நபர் வியாழக்கிழமை (மே 6) இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஒ.சி.பி.டி உதவி ஆணையர் முகமட் ஃபட்ஸில் அலி தெரிவித்தார்.

முகநூல் கணக்கில் எடுக்கப்பட்ட பல ஸ்கிரீன் ஷாட்களின் ஆரம்ப விசாரணையில் இந்த இடுகைகளில் கேவலமான வார்த்தைகள் மற்றும் போலீசாருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இருந்தன என்று அவர் கூறினார்.

சமூக ஊடக இடுகையை பதிவேற்ற பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதால், அந்த பெண்ணின் கைபேசியை போலீசார் பறிமுதல் செய்ததாக ஏ.சி.பி. முகமட்  ஃபட்ஸில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் பிரிவு 504 மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version