Home சினிமா மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான்

மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான்

 தீவிர சிகிச்சைப் பிரிவில்  சேர்க்கப்பட்டார் !!

நடிகர் மன்சூர் அலிகான் பெரும்பாலும் வில்லன் வேடங்களிலும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அவருக்கு ஒரு திருப்புமுனையாக மாறியது கேப்டன் பிரபாகரன் திரைப்படம். இது ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. சினிமாவில் ஒரு படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே போல் வில்லன் கதாபாத்திரமும் முக்கியம்.

அதேபோல் 90களில் வில்லனாக தனது நடிப்பின் மூலம் அனைவரையும் பயம்புரித்திய நடிகர் என்றால் மன்சூர் அலிகான் தான். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் வில்லனாக நடித்துள்ளார் இவர்.

அதன் பின் இயக்குநரும், அரசியல் தலைவருமான சீமான் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட, நடிகர் மன்சூர் அலிகான் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version