Home இந்தியா புத்தகம் போதும், பூங்கொத்து வேண்டாம்’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

புத்தகம் போதும், பூங்கொத்து வேண்டாம்’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து தருவதை தவிர்த்து, புத்தகங்களை தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த இரண்டு நாள்களாக முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள். இதன் பொருட்டு என்னை சந்திக்கவும், வாழ்த்துகளை தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றை தவிர்த்து புத்தகங்களை வழங்குகள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா தடுப்பு பணிகளுக்காக தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களுக்கு வரவேற்பு தரப்பட்டதாக செய்திகள் வருகின்றன. கரோனா பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version