Home Uncategorized ஆலயங்களின் நிலப் பிரச்சினைகளால் அதிருப்தி

ஆலயங்களின் நிலப் பிரச்சினைகளால் அதிருப்தி

இந்துக்களின் கழுத்தை நெறிப்பது ஏன்?

தனியார் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் மாற்று இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அராஜகப் போக்கைக் கடைப்பிடிக்கும் சில அரசு அதிகாரிகளின் நிலை தேவையற்றது .

ஆலயங்களில் எழும் நிலம், இடமாற்றுப் பிரச்சினையில் இந்து அறப்பணி வாரியம் அதற்கான தீர்வை காணும் முயற்சிகளை எடுக்கும் வேளையில் சில அரசு சார்பு இயக்கங்கள், உள்ளாட்சி மன்ற அதிகாரிகள் கெடுபிடியாகவும், அராஜகமாகவும் நடந்துகொள்ளும் போக்கு பெருத்த வருத்தமளிக்கிறது என  என்று புக்கிட் மெர்த்தாஜம், இந்து தர்ம மாமன்ற அருள் நிலையத்தின் 17 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மு.இராமசந்திரன் அறிவுறுத்தினார்.

அண்மைக் காலமாக இந்து ஆலயங்கள் பிரச்சினைக்குள்ளாவதைச் சுட்டிக் காட்டிய அவர் , தோட்டங்களின் அறை நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்கள் தோட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்த வரையில் ஆலயங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன.

ஆனால் தோட்டங்கள் விற்கப்பட்ட பிறகு ஆலயங்கள் அப்படியே விடப்பட்டு, நிலத்தைக்கூட ஆலயத்திற்கு வழங்காமலிருந்த நிலை நேற்று ஆலயத்தை வெளியேற்றும் பிரச்சினைகள் தலைத்தூக்க தொடங்கிவிட்டன.

இந்து ஆலயங்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலம். அரசாங்கமே முன் வந்து மாற்று இடங்களுக்கு வழிகாட்டினால் இவ்விவகாரம் தலை தூக்காது.

இவ்விவகாரத்தில் இந்து ஆலயங்களுக்கு மட்டும் புறக்கணிப்புகள் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று மட்டும் விளங்கவேயில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version