Home Hot News இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலி: காஸாவில் பிரபல செய்தி நிறுவனங்கள் தரைமட்டம்

இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலி: காஸாவில் பிரபல செய்தி நிறுவனங்கள் தரைமட்டம்

ஜெருசலேம்: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் நேற்று காஸாவில் இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் நொறுக்கப்பட்டன.

மொத்த காஸாவும் கடந்த 10 நாட்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஜெருசலேமில் அல் அக்சா மசூதியில் இஸ்ரேல் நடத்திய ரெய்டுக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் படை பதில் தாக்குதல் நடத்திய காரணத்தால் தற்போது ஹமாஸ் போராளி குழுவை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.

காஸாவில் கடந்த ஒரு வாரமாக தினமும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் காஸாவின் போராளின் குழுவான ஹமாஸ் இதற்கு தீவிரமாக பதிலடி ராக்கெட் தாக்குதல்கள் நடத்திக் கொண்டு இருக்கிறது.

 

எப்படி

இதுவரை நடத்த பல்வேறு தாக்குதல்களில் காஸாவில் பொதுமக்கள், ஹமாஸ் போராளி குழுவினர் உட்பட 145 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். காசாவில் ஹமாஸ் குழுவினர், அதன் தலைவர்கள் இருக்கும் இடங்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்கி வருகிறது.

கொலை

ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கலீல் அல் ஹயாத் வீட்டிலும் கூட வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை 20க்கும் அதிகமான ஹமாஸ் போராளி குழு தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு காஸாவில் இருக்கும் பெரிய கட்டிடங்களை மட்டும் குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.

கட்டிடங்கள்

10 மாடி கட்டிடங்கள், 14 மாடி குடியிருப்புகள் என்று பெரிய கட்டிடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது. மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுவிட்டு, சில நிமிடம் அவகாசம் கொடுத்துவிட்டு இஸ்ரேல் இப்படி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று காஸாவில் பிரபல செய்தி நிறுவனமான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் வான்வழி தாக்குதல் மூலம் அடித்து நொறுக்கப்பட்டன.

காஸா

காஸாவில் உள்ள உயரமான 12 மாடி அல் ஜாலா கட்டிடத்தில் இந்த அலுவலகங்கள் இருந்தன. இங்கு இன்னும் பல உள்ளூர் செய்தி நிறுவனங்களும் இருந்தன. இங்கு நேற்று தக்க போவதாக இஸ்ரேல் கூறியது. ஒரு மணி நேரம் டைம் தருகிறோம், உடனே வெளியேறுங்கள், அதன்பின் தாக்கிவிடுவோம் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கு இருந்த செய்தியாளர்கள் எல்லோரும் வெளியேறிய நிலையில், இஸ்ரேல் அந்த 12 மாடி கட்டிடத்தை தரை மட்டமாக்கியது.

எப்படி

இங்கு காஸா தீவிரவாதிகள் குழு பதுங்கி இருந்ததாகவும். இங்கு அவர்களின் கேம்ப் இருந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த தாக்குதலை அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்கள் மற்றும் பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் கண்டித்துள்ளன. பொதுவாக போர் நடக்கும் போது செய்தி நிறுவனங்கள் இருக்கும் இடங்கள் தாக்கப்படாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version