Home மலேசியா இஸ்ரேலின் மிரட்டல் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும்

இஸ்ரேலின் மிரட்டல் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும்

உள்துறை அமைச்சர் தகவல்

கோலாலம்பூர்-
மலேசியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன போராட்ட அமைப்பின் தலைவர்கள் மீது இஸ்ரேல் விடுத்திருக்கும் பாதுகாப்பு மிரட்டலை உள்துறை அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.

இது தொடர்பில், நாட்டில் இருக்கும் பாலஸ்தீனப் பிரஜைகள் உட்பட மலேசிய மக்களின் பாதுகாப்பு, பொது அமைதியைப் பாதுகாக்க அரசு மலேசிய காவல்படை இதர பாதுகாப்பு இலாகாவுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.

அதே சமயம் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அமைப்புகள் நம் நாட்டில் உள்ளதையும் அமைச்சு கருத்தில் கொள்கிறது.

எனவே நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு மலேசிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் என்பதையும் அமைச்சர் தனது அறிக்கையில் சு ட்டிக்காட்டினார்.

Previous articleமலாக்காவில் திடீர் வெள்ளம்; 554 பேர் தற்காலிக மையங்களில் தஞ்சம்
Next articleஅடுத்த 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version