Home உலகம் தடுப்பூசி போட்டு ரூ.7.25 கோடி வென்ற பெண்..!

தடுப்பூசி போட்டு ரூ.7.25 கோடி வென்ற பெண்..!

அதிஷ்டமோ ( ர்) அதிர்ஷ்டம்.. !!

கொரோனா ஆளைக்கொல்லும் தொற்று நோய்தான். அதற்கு தடுப்பூசி தேவைபடுகிறது என்பதும் உண்மைதான். ஆனாலும்  தடுப்பூசி மூலம் கிடைத்த  அதிர்ஷ்டத்தை மறுக்க முடியுமா? 

அது வேரு இது வேறு.   என்ன நான் சொல்றது! என்கிறாரா இந்தப் பெண். 

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஓஹையோ மாகாணத்தில் 22 வயது பெண் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு குலுக்கள் போட்டியில் கலந்து கொண்டார்.

அதில் அவருக்கு ரூ.7.25 கோடி பரிசாக விழுந்தது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்கு வருடம் முழுவதும் கல்லூரி கட்டணம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version