Home உலகம் கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல!

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல!

– விஞ்ஞானிகள் அறிக்கை..!

பிரிட்டன் , நார்வே நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் கொரோனா இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்கிற விபரம் தெரியவந்துள்ளது.

2019- ஆம் ஆண்டு சீனா நாட்டின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான வூஹானில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டுப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வைரஸ் கிருமி உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கியது.இன்னும் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் இன்னும் எதிரொலித்து வருகிறது.

முன்னதாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் ஆய்வு மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தொடர்ந்து இதனுடைய தாக்கம் நீடித்து வரும் சூழலில் உலகெங்கிலும் இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அங்கஸ் டக்லீஸ் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பிர்ஜர் சோரன்சன் என்கிற ஆய்வாளர்கள் தலைமையில் ஆராய்ச்சிகள் தொடங்கின. அதனுடைய முடிவுகளை புகழ் பெற்ற டெய்லி மெயில் என்கிற பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்று ஆய்வாளர்கள் அங்கஸ் டக்லீஸ் மற்றும் பிர்ஜர் சோரன்சன் தெரிவித்துள்ளனர். மேலும், சீனாவின் வூஹான் மாநிலத்தில் அது உருவாக்கப்பட்டுள்ள அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் உற்பத்தியானதை மறைக்க, அது  வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version