Home Hot News கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை முதுகில் சுமந்து சென்று, மருத்துவமனையில் சேர்த்த சிங்கப்பெண்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை முதுகில் சுமந்து சென்று, மருத்துவமனையில் சேர்த்த சிங்கப்பெண்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது மாமனாரை, தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சிங்கப்பெண் நிகாரிகாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்படுகிறது.

ஒடிசாவை சேர்ந்த சூரஜ். வெளியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். எனவே இவரது மனைவி நிகாரிகா மற்றும் மாமனார் (சூரஜின் தந்தை,75) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மாமனாருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.அவருக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை கேட்டதும் நிகாரிகா வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், வயதான மாமனாரை முதுகில் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றார். சாலையில் இவரை பார்த்தவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து நிகாரிகாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாமனாரை தூக்கிச் சென்றதால் நிகாரிகாவிற்கும் கோவிட் தொற்று இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது .இப்போது மாமனாரும், மருமகளும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version