Home Hot News கடப்பிதழ் காலாவதியாகும் வெளிநாட்டிலுள்ள மலேசியர்கள் இலவசமாக இரு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

கடப்பிதழ் காலாவதியாகும் வெளிநாட்டிலுள்ள மலேசியர்கள் இலவசமாக இரு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

சிங்கப்பூர்: வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களில் இந்த ஆண்டு கடப்பிதழ் (passport) காலாவதியாகுபவர்கள் இலவசமாக இரண்டு ஆண்டு நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 8) அன்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டை நீட்டிக்க விரும்பும் மலேசியர்கள் அதற்கான விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து, உயர் ஸ்தானியர் ஆணையம் அல்லது தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்கள் கடப்பிதழ்ளை முத்திரை குத்த வேண்டும் என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஆனால் அதிக அளவு விண்ணப்பங்கள் இருப்பதால் எட்டு முதல் 12 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும்  இவ்வாறு கால நீட்டிப்பை பெறுபவர்கள் தங்கள் கடப்பிதழின் கண்காணிப்பு பக்கத்தில் அல்லது 48 ஆம் பக்கத்தில் முத்திரை குத்தப்படும் எனறும் தெரிவித்தது.

மேலும் கடப்பிதழ்களை புதுப்பித்தல்களையும் இணையத்தில் செய்ய முடியும் என்று மலேசிய அரசாங்க வலைத்தளமான MyGOV தெரிவித்துள்ளது.

குடிநுழைவுத்துறை 2020 ஜூலை முதல் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு வருகின்றது என்றும் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கடப்பிதழை பெற்றுக்கொள்வதற்கு 200 ரிங்கிட்டும் 13 வயதுக்கு குறைவானவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 100 ரிங்கிட்டும் அறவிடப்படுகின்றது என்று மலேசிய தூதரக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleசூரியகிரகணம் – கர்ப்பிணிகள் பார்க்கலாமா?
Next articleசூரியனில் இருந்து ஆபத்தான கதிர்கள் வெளிப்படுமா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version