Home உலகம் ஒரு சிறிய குழு உலகை ஆண்ட காலம் மலையேறி விட்டது ; ஜி-7 மாநாட்டை எதிர்க்கும்...

ஒரு சிறிய குழு உலகை ஆண்ட காலம் மலையேறி விட்டது ; ஜி-7 மாநாட்டை எதிர்க்கும் சீனா.

இங்கிலாந்து (ஜூன்14) : ஜி-7 நாடுகளின் சிறிய குழுவினரால் இவ் உலகை கட்டுப்படுத்த முடியாது என்று ஜி-7 மாநாட்டிற்கு எதிராக தனது பகிரங்கமாக எதிர்ப்பை சீனா தெரிவித்தது.

“உலகளாவிய முடிவுகளை ஒரு சிறிய குழு நாடுகளால் கட்டளையிடப்பட்ட நாட்கள் காணாமல் போய் நீண்ட காலமாகிவிட்டன” என்று லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தார்.

“பெரிய அல்லது சிறிய, வலுவான அல்லது பலவீனமான, ஏழை அல்லது பணக்கார நாடுகள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாது அனைத்தும் சமம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என்றும்  உலக விவகாரங்கள் சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் போது அனைத்து நாடுகளின் ஆலோசனைகளை கேட்டு அதன் படியே முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறினார்.

இன்னொரு பக்கம் கொரோனா பரவல் தோற்றம் குறித்து விசாரிக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு இருப்பதும் கூட சீனாவிற்கான நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச நட்புகள் இன்றி தனித்து விடப்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த ஜி 7 மாநாட்டில் சீனாவின் வளர்ச்சி குறித்தும், சீனா மற்ற நாடுகளை கட்டுப்படுத்த நினைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர். முக்கியமாக சீனாவின் Belt and Road initiative சர்வதேச இணைப்பு திட்டத்திற்கு எதிராக திட்டங்களை கொண்டு வர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version