சிங்­கப்­பூர், இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லிருந்து கிட்­டத்­தட்ட 150 ஓவி­யக் கலை­ஞர்­கள், 400க்கும் மேற்­பட்ட ஓவி­யங்­களை ஓர் அரிய முயற்­சிக்­காக சமர்ப்­பித்­துள்­ள­னர். மே 27 முதல் ஜூன் 23 வரை ‘ஞானி ஆர்ட்ஸ்’ கலை அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள ‘அண்ட் ஷி ஸ்லேஸ் தி டீமன்’ (And She Slays the Demon) என்ற இணை­யக் கண்­காட்­சி­யில் அனை­வ­ரும் இல­வ­ச­மா­கக் கண்டு களிப்­ப­தற்­காக இந்த ஓவி­யங்­கள் இடம்­பெ­றும்.

“சிர­மப்­படும் மக்­க­ளின் நல­னுக்­காக ஓவி­யக்­கலை துணை­போ­வ­தைக் காணும்­போது என் மனம் குளிர்­கிறது,” என்று கூறி­னார். இந்­தக் கண்­காட்­சி­யைத் திட்­ட­மிட்டு தொடங்க கிட்­டத்­தட்ட ஒரு மாத காலம் ஆன­தாக ஏற்­பாட்­டா­ள­ரும் கலை­ஞ­ரு­மான பி. ஞானா தெரி­வித்­தார்.
அருங்­காட்­சிக் காப்­பா­ளர்­கள் வித்யா கௌரே­சன், பவாத் தம்­க­னாட் இரு­வ­ரை­யும் இத்­திட்­டத்­தில் ஈடு­ப­டுத்­தி­ய­து­டன் சமர்ப்­பிக்­­கப்­பட்ட ஓவி­யங்­களைப் பல வாரங்­க­ளாக ஆராய்ந்­த­தாக அவர் கூறி­னார்.

 

செய்தி: கி.ஜனார்த்­த­னன்