Home விளையாட்டு இந்திய யானையின் கணிப்பு! – மக்கள் ஆச்சர்யம்!

இந்திய யானையின் கணிப்பு! – மக்கள் ஆச்சர்யம்!

ஃபுட்பால்  வெற்றியைத் தீர்மானிக்கிறது 

ஈரோ கால்பந்து போட்டி வெற்றிகளை ஜெர்மனியில் உள்ள இந்திய யானை துல்லியமாக கணிப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் முந்தைய பிபா உலக கோப்பை வெற்றிகளை ஆமை ஒன்று கணித்தது போல, ஈரோ உலக கோப்பையை ஜெர்மனியில் உள்ள இந்திய யானை ஒன்று துல்லியமாக கணித்து வருகிறது.

ஜெர்மனியின் ஹம்பர்க் மிருக காட்சி சாலையில் உள்ள 45 வயது யானை ‘யசோதா’. இந்திய வனத்தில் பிறந்த யசோதா 1990 இல் ஜெர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோ உலக கோப்பை போட்டிகளில் அன்றைய நாள் மோதும் இரு அணிகளின் நாட்டு கொடிகளையும் ஒரு சில்வர் பெட்டியில் யசோதா முன்பு வைக்கிறார்கள். அது எந்த கொடியை எடுக்கிறதோ அந்த நாடு வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.

நேற்று ஜெர்மனி-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே போட்டி நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதாகவே பிரான்ஸ்தான் வெற்றிபெறும் என யசோதா கணித்திருந்தது.

அதன்படியே நேற்றைய ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் பிரான்சிடம் மண்ணை கவ்வியது ஜெர்மனி. அதை தொடர்ந்து யசோதாவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version