Home Uncategorized நுரையீரல் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை.!

நுரையீரல் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை.!

 நலமுடன் வாழ நல்வழி பேணல்

நுரையீரல் பாதிக்கப்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பின்னடைவை எதிர்கொள்ளும். காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள்.

சுவாச பிரச்சினைகளும் நுரையீரலை பலவீனப்படுத்தும். அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தவகை மீன்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுத்துவிடலாம். வாரம் இருமுறையாவது மீன் சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் ஆன்டிஆக்ஸிடென்டு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். செரிமான பிரச்சினையும் சரியாகும்.

கீரைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவும். உணவில் அடிக்கடி கீரை சேர்த்து கொண்டால் நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.

நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு கோதுமையும் துணைபுரியும். அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோதுமையில் வைட்டமின்-இ அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதும் அவசியமானது. அதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. வேகவைக்காமல் அப்படியே சாப்பிடலாம். தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் குறையும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version