Home உலகம் டெல்டா வகை உருமாற்ற தொற்று

டெல்டா வகை உருமாற்ற தொற்று

அதிகளவில் பரவக்கூடியது என எச்சரிக்கை

ஜெனிவா:

உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை… இதுவரை காணப்பட்ட வகைகளிலேயே டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருக்கிறார்.


உலகில் 85-க்கும் மேலான நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் டெல்டா வகை மாறுபாடு, இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளிலேயே “மிகவும் அதிகம் பரவக்கூடியது” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வகை வைரஸ் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப்படாத மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் அவர் கூறினார்.


இதுகுறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம், “உலகளவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டைப் பற்றி நிறைய அக்கறை உள்ளது என்பதை நான் அறிவேன் , உலக சுகாதார நிறுவனமும் அதைப் பற்றி அதிகளவில் கவலை கொண்டுள்ளது ” என்று அவர் கூறினார் .

Previous articleஇப்படி ஒரு கண்காட்சியா.? பெருமிதம் கொள்ளும் பொதுமக்கள்..
Next articleமருத்துவ ஊழியர்களின் அலட்சியம்; இரட்டை சகோதரிகள் மாற்றப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்தனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version