Home மலேசியா வருத்தும் பிரச்சினைகளுக்கு மருந்தில்லா மருத்துவம்

வருத்தும் பிரச்சினைகளுக்கு மருந்தில்லா மருத்துவம்

தினசரியோடு தினம் அனுசரி

மருந்துகள் இல்லாமல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில வழிகள் இருக்கிறதா? இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் சில அனுபவ சாலிகள்.

1.  இரத்த சர்க்கரையைக் குறைக்க தினசரி உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை 64 சதவீதம் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

2. நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். இதன் மூலம் அதிகப்படியான குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது. மனம் நிறைய சிரிப்பது இரத்த சர்க்கரை அளவை 48 சதவீதம் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்கள் நடைபயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மையை விட இரண்டு மடங்கு அதிகம் தான்.

3. ஒவ்வொரு மூன்று மணி முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்வது உயர் இரத்த சர்க்கரையின் அபாயத்தை 32 சதவீதம் குறைக்கிறது. நன்கு நீரேற்றமாக வைத்து இருப்பது குளுக்கோஸை உற்பத்தி செய்யும் வாசோபிரசின் என்ற ஹார்மோனின் அளவை குறைக்கும்.

4. மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் ,  கோழி, மட்டன் இறைச்சியை எடுத்துக் கொள்வதுடன், கார்ப் நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அதிகரிப்பை 37 சதவீதம் குறைக்கும். இந்த உணவுகளில் உள்ள புரதம், பைபர் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை குறைவாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன

Previous articleபெண்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!
Next articleபிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையில் தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்; ஜேபிஎன் தகவல்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version