Home உலகம் விண்வெளியில் பறந்து சாதனை படைக்கத் தயாரானார் பெசோஸ்

விண்வெளியில் பறந்து சாதனை படைக்கத் தயாரானார் பெசோஸ்

புவியீர்ப்பு விசை அற்ற வெளியில் அதிக உயரம் பறக்கத் திட்டம்!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஸோஸ் வரும் 20 ஆம் தேதி தனது சகாக்களுடன் விண்வெளி சுற்றுலா செல்ல இருக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேற்கு டெக்சாஸ் என்ற இடத்தில் இருந்து விண்கலத்தை ஏந்திய விமானம் விண்வெளிக்கு புறப்பட உள்ளது.

வாஷிங்டன்:

இந்த விமானம் ஜெப் பெஸோசின் சொந்த விண்வெளி நிறுவனமான புளு ஆரிஜின் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். கடந்த 2000 ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெஸோஸ், கடந்த மாதம் அமேசான் நிறுவனத்தில் இருந்து விலகி விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

இவர் 20  ஆம் தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கும் நிலையில் கடந்த 11  ஆம் தேதி பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், இந்திய வம்சாவழி பெண் ஸ்ரீஷா பாணட்லா உள்ளிட்ட 5 பேருடன் விண்வெளியில் மிதந்து சாதனைப் படைத்தார்.

தனது சொந்த நிறுவனமான விர்ஜின் கேலடிக் என்ற நிறுவனத்தின் விண்கல விமானம் மூலம் சென்று இந்த சாதனையை அவர் படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்லும் திட்டத்தை பெரும் செல்வந்தர்களின் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெஸோசின் புளு ஆரிஜின் ஆகிய நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன.

20  ஆம் தேதி செல்லும் பயணத்தில் ஜெப் பெஸோஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெஸோஸ், அமெரிக்காவின் மிக மூத்த ஓய்வு பெற்ற 82 வயதான பெண் விமானியும்  இப்பயணத்தில் இணைய  உள்ளனர்.

ரிச்சர்ட் பிரான்சன் வளிமண்டலத்தில் இருந்து வெறும் 90 கிலோ மீட்டர் உயரம் தான் சென்றார். ஆனால், ஜெப் பெஸோஸ் சர்வதேச விண்வெளி மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை வரை பறக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பூஜியம் அளவு புவியீர்ப்பு விசையில் சில மணி நேரம் இவர்கள் மிதக்கவுள்ளனர்.

Previous articleதிருப்பிப் போட்ட மழையும் காவு வாங்கிய வெள்ளமும்
Next articleஇன்று 12,541 பேருக்கு கோவிட் தொற்று

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version