Home மலேசியா குவந்தானில் 63 போலீசாருக்கு கோவிட் -19 தொற்று உறுதி

குவந்தானில் 63 போலீசாருக்கு கோவிட் -19 தொற்று உறுதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18:

குவந்தான் மாவட்டத்தில் மொத்தமாக 63 போலீஸ் உறுப்பினர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி. அத்துடன் போலீஸ் அதிகாரி ஒருவர் ICU வில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோவிட் -19 தொற்றுக்கு நேர்மறையான முடிவை பெற்று வந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நூர் யூசுப் அலி தெரிவித்துள்ளார்.

63 பேரில் , 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 20 பேர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர், மேலும் 31 பேர் கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.

முகமட் நூரின் கூற்றுப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியதாகக் கருதப்படும் இந்த தொற்று ஆரம்பத்தில் பல உறுப்பினர்களை உள்ளடக்கியது.

“கோவிட் -19 தொற்றுக்குள்ளான சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் இப்போது பணி நியமன பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் விரைவில் குணமடைந்து கடமைக்கு திரும்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தினசரி பணிகளுக்காக போலீஸ் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பகாங் போலீஸ் தலைமையகத்திலிருந்து (IPK) உதவி பெற்று வருவதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version