Home Hot News 4ஆவது முறையாக வெளியுறவுத்துறை அமைச்சர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்

4ஆவது முறையாக வெளியுறவுத்துறை அமைச்சர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புக்கு வந்த பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுதீன் ஹுசைன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், தனிமைப்படுத்தலின் காரணமாக தனது  செம்ப்ராங் தொகுதியில் இருக்கும் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற   இருவரை வாழ்த்துவதற்காக தனது அங்கு செல்ல முடியாமல் போனதற்காக ஹிஷாமுதீன் மன்னிப்பு கேட்டார்.

அதற்கு பதிலாக ஹிஷாமுதீன் வோங் ஹுய் ஜுன், ஹெவ் யீ ஹான் ஆகியோர் சிறந்த எஸ்பிஎம் முடிவுகளை பெற்றத்தற்காக வீடியோ அழைப்பு மூலம் வாழ்த்தினார். அங்கு வோங் மற்றும் ஹியூ தலா 11 ஏ மற்றும் 10 ஏக்களைப் பெற்றனர்.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட  ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் நான் தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலில் இருக்கிறேன் என்று அவர்  (ஜூலை 17) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். ஹிஷாமுடின் கோவிட் தொற்று ஆரம்பத்தில் இருந்து 4 ஆவது முறையாக தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version