Home உலகம் 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பரவிய குரங்கு பி வைரஸ்

1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பரவிய குரங்கு பி வைரஸ்

புது தலைவலி ,சீனாவில் டாக்டர் பலி!

பீஜிங்:

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக ஒரு வைரஸ் கிளம்பியுள்ளது. ‘குரங்கு பி’ வைரஸ் (Monkey B Virus) தாக்கி சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளார்.

53 வயதாகும் சீனாவின் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்துள்ளார்.

ஆனால் இதன்பிறகு படிப்படியாக அவர்கள் உடல்நிலை மோசமாகியது.

கடந்த மே மாதத்தில் அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே 27 இல் மரணமடைந்தார். எந்த மருத்துவர்களும் இவரது நோய்க்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்கவில்லை.

எனவே, இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர் மருத்துவர்கள். அதில், ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932 இல் கண்டறியப்பட்டது. குரங்கு கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம் அதிகம். அதாவது, 70 முதல் 80 சதவீதம் என்று கூறுகிறார்கள்.

எனவே, குரங்கு உள்ளிட்ட மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1 முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படுமாம். பிறகு, மெல்ல மெல்ல அந்த வைரஸ், மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உயிரிழந்த

நோயாளியின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை என்று, குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்காக்களில் ஆல்பாஹெர்பெஸ்வைரஸ் என்ஸூடிக் குரங்கு வைரஸ் ஆரம்பத்தில் 1932  ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, குரங்கு வைரஸ் மனிதர்களுக்கு பரவும்போது மத்திய நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version