Home இந்தியா இந்தியா-நேபாளம் விமானப் போக்குவரத்து அதிகரிப்பு

இந்தியா-நேபாளம் விமானப் போக்குவரத்து அதிகரிப்பு

இந்தியா-நேபாளம் இடையிலான விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரத்தில் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6 விமானங்களை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு விமான நிறுவனங்களும் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன. தில்லி-காத்மாண்டு இடையே இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

முன்னதாக, கரோனா தொற்று பரவல் காரணமாக இருநாடுகள் இடையே வாரத்துக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு தேவை அதிகரித்ததையடுத்து இரு விமானங்கள் இயக்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து ஏராளமானோா் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஒரு கட்டத்தில் நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கு அதிகம் போ முயன்ால் விமானக் கட்டணம் சுமாா் 6 மடங்கு அதிகரித்து ரூ.50,000 வரை நிா்ணயிக்கப்பட்டது. எனவே, இப்போது தேவைக்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நேபாள விமானப் போக்குவரத்துத் துறை செய்தித் தொடா்பாளா் ராஜ் குமாா் சேத்ரி கூறுகையில், ”நேபாள ஏா்லைன்ஸ் மற்றும் ஏா் இந்தியா இடையே வாரத்துக்கு தலா 3 விமானங்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 6 விமானங்கள் இந்தியா-நேபாளம் இடையே இயக்கப்படும்” என்றாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version