Home Hot News மூன்று இந்தோனேசியர்களை காருக்கு வைத்து கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநர் கைது

மூன்று இந்தோனேசியர்களை காருக்கு வைத்து கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநர் கைது

ஈப்போ: 36 வயதான வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரின் பின்பகுதியில் மூன்று இந்தோனேசியர்களை கடத்த முயன்றது இங்கிருந்து 106 கி.மீ தூரத்தில் உள்ள ஊத்தாங் மெலிந்தாங்கில் போலீசாரால் முறியடிக்கப்பட்டது.

இன்று (ஜூலை 20) காலை 6 மணியளவில் ஜாலான் ஃபெரியின் சாலைத் தடுப்பில் சந்தேகநபர் சந்தேகத்துடன் நடந்து கொண்டதாகவும், சோதனைக்காக சாலையோரத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ஹிலிர் பேராக் ஒ.சி.பி.டி. உதவி ஆணையர் அஹ்மட் அட்னான் பாஸ்ரி தெரிவித்தார்.

போலீசார் தங்களை அடையாளம் காட்டிய பின்னர், அவர்கள் வாகனத்தை சோதனை செய்தனர். மூன்று இந்தோனேசிய ஆண்களும் காரின் டிக்கியில் (பின்பகுதியில்) நெரிசலாக இருப்பதை அவர்கள் கண்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.சி.பி. அஹ்மட் அட்னான் மேலும் சோதனை செய்தபோது, ​​இந்தோனேசியர்கள் சரியான பயண ஆவணங்கள் இல்லாமல் இருந்தனர். செலயாங் பாருவைச் சேர்ந்த ஓட்டுநர், மாநிலங்களைக் கடக்க எந்த ஆவணங்களும் வைத்திருக்கவில்லை.

அவர் சிலாங்கூரின் சபாக் பெர்னாமில் இருந்து ஊத்தாங் மெலிந்தாங்கிற்கு வந்ததாகவும் மேலும் அவர் பத்து காஜாவை நோக்கிச் சென்றார் எனவும் என்று ஏசிபி அஹ்மட் அட்னான் கூறினார். பண்ணையில் வேலை தேடுவதற்காக மூன்று பேரும் சந்தேக நபருக்கு தலா 300 வெள்ளி வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது  என்று அவர் கூறினார்.

குடிவரவு சட்டத்தின் பிரிவு 55 E கீழ் வெளிநாட்டினரை கடத்தி, அடைக்கலம் கொடுத்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். சரியான பயண ஆவணங்களை தயாரிக்கத் தவறியதற்காக இந்தோனேசியர்கள் அதே சட்டத்தின் பிரிவு 6 (1) (c) இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அனுமதி இல்லாமல் மாநிலங்களை கடப்பதற்கும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.  ஏ.சி.பி அஹ்மட் அட்னான் கூறுகையில் உள்ளூர் வாடகை கார் ஓட்டுநர்  நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.   இந்தோனேசியர்கள் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version