Home உலகம் ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது 

ஈரான், ஜூலை 20- ஈரானுடனான அணுசக்தி ஒப் பந்தத்தில் இருந்து அமெரிக்காகடந்த 2018ஆம் ஆண்டு வெளியேறியதுமுதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.

இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர்பாக, ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட அமெரிக்காஅல் லாத மற்ற 5 நாடுகளுக்கும்ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர்வியன்னாவில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு பேச்சுவார்த்தை தொடங் கியது.

அதேபோல்அமெரிக்கா, ஈரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இரு நாடுகளிடையேபேச்சு வார்த்தை தொடங்கியது.

இந்த சூழலில் ஈரான்அதிபர் தேர்தலையொட்டி கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை, கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப் பட்டன .

ஈரானின் புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்டு மாதம் பதவியேற்ற பின்னரே , நிறுத்திவைக்கப் பட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என ஈரான் அண்மையில் அறிவித்தது . ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் , ” ஈரானின் இந்த அறிவிப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மீண்டும் திரும்புவதற்கான முட்டுக்கட்டைக்கான காரணத்தை திசை திருப்பும் ஒரு மூர்க்கத்தனமான முயற்சி  என்றார்.

இதன் மூலம் அணுசக்தி ஒப்பந்த பேச்சு வார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது . ஈரான் ஒரு மனிதாபிமான சைகை செய்வதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் , அந்த நாடு அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்கும் என கூறினார் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version