Home உலகம் அசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்

அசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்

வெளிநாட்டு நண்பர்களுடன் பேசுவதில் சிக்கலா? 

இளைஞர்களை கவர்ந்திருக்கும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு/மாநில நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை அசத்தலான வசதியின் மூலம் சரிப்படுத்தியுள்ளது.

மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்ட்டை அறிந்து கொள்ள மொழி மாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தால் அதன் மேலிருந்து இடது புறத்தில் மொழி மாற்றத்திற்கான வசதி இருக்கும், அதை கிளிக் செய்தவன் மூலம் அவர்களின் பதிவுகளைச் சொந்த மொழியில் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நண்பர்களை எளிதாக அணுக 90 மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, கமெண்ட், கேப்சன், பயனர்களின் அறிமுக பக்கம் ஆகியவற்றுக்கு மொழி பெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், பதிவுகளுக்கு மொழி பெயர்ப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை.

தற்போதைக்கு, ஆடியோ மொழி பெயர்ப்பு வசதி உருவாக்கப்படவில்லை எனவும் இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளையும் ரீல்ஸ்களையும் இணைக்க சோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version