Home Hot News Hartal Doktor Kontrak போராட்டம் திட்டமிட்டப்படி திங்கட்கிழமை நடைபெறும்

Hartal Doktor Kontrak போராட்டம் திட்டமிட்டப்படி திங்கட்கிழமை நடைபெறும்

அரசாங்க ஒப்பந்த மருத்துவர்களின் போராட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவித்தை தொடர்ந்து புத்ராஜெயா நேற்று அவர்களை சமாதானப்படுத்த கடைசி நிமிட சலுகைகளை வழங்கிய போதிலும்,  திட்டமிட்டபடி அரசாங்க ஒப்பந்த மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அதன் அமைப்பாளர் கூறினார்.

Hartal Doktor Kontrak  இயக்கத்தின் தலைமையிலான குழு நேற்று பிரதமர் முஹிடின் யாசின் அறிக்கையில் அரசாங்கம் வழங்கிய தீர்வுகள் “half-cooked” மட்டுமே என்றும் ஆனால் எங்களின் கோரிக்கை ஒரு தீர்வாக  இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

எங்களுக்கு மற்றொரு ஆண்டு ஒப்பந்தத்தை வழங்குவது ஒரு தீர்வாகாது; இது எங்களை மூடுவதற்கு ஒரு sugarcoated செய்யப்பட்ட அறிக்கை. பிரதமரின் அறிக்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எங்களால் அதை ஏற்று கொள்ள முடியாது. நாங்கள் மட்டுமல்ல. போதுமான புத்திசாலி யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தத் துறையில் கூட இல்லாத நபர்களால் அரை வேக்காடான தீர்வை எங்களுக்கு வழங்குவதை நிறுத்துங்கள். இந்த சிஸ்டம் எவ்வாறு இயங்குகிறது என்று கூட அவர்களுக்குத் தெரியாது அல்லது பிரச்சினை அவர்களுடையது அல்ல என்பதால் அதைப் பற்றி முழுமையாக சிந்திக்கக்கூட தேவையில்லை என்று இயக்கத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர். ஹர்த்தால் (வேலைநிறுத்தம்) நிச்சயமாக நடக்கும் என்று குழு மேலும் கூறியது.

இயக்கத்தின் பிரதிநிதிகள்  செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து மேலும் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் தொழில் பாதை வாய்ப்புகளை அவர்களின் நிரந்தர சகாக்களுக்கு இணையாக வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக நேற்று முஹிடின் அறிவித்தார்.

ஒப்பந்த அதிகாரிகளுக்கு முழு ஊதியம் பெறும் படிப்பு விடுப்பு போன்ற பிற சலுகைகளையும் அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், இந்த அறிக்கை குழுவின் முக்கிய கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இது அனைத்து அரசாங்க ஒப்பந்த மருத்துவர்களுக்கும் நிரந்தர பதவிகளைப் பெறுவதாகும். அதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களின் ஒப்பந்தத்தை அதிகபட்சமாக நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முன்வந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version