Home Hot News பிரசவத்திற்கு உதவிய ஷாஆலம் தீயணைப்பு வீரர்கள்; சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டுகள்

பிரசவத்திற்கு உதவிய ஷாஆலம் தீயணைப்பு வீரர்கள்; சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டுகள்

ஒரு பெண் காரில் குழந்தையை பிரசவிக்க  நேற்று இரவு  தீயணைப்பு நிலைய வளாகத்தில் உதவியதற்காக ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் ஹீரோக்கள் என்று புகழப்படுகிறார்கள். இரவு 7 மணியளவில் கணவர் தனது மனைவியை ஷா ஆலம் மருத்துவமனைக்கு புங்சாக் ஆலத்தில் உள்ள வீட்டிலிருந்து பிரசவிப்பதற்காக விரைந்து வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

29 வயதான பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், மருத்துவமனைக்குச் செல்லும்போது அவருக்கு பிரசவ வலி அதிகரித்தால் கோத்தா அங்கெரிக் தீயணைப்பு நிலையத்திடம் உதவி பெற கணவர் முடிவு செய்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராசாம் காமிஸ் தெரிவித்தார்.

பெரித்தா ஹரியன் அறிக்கையின்படி, அந்த பெண் ஒரு தீயணைப்பு அதிகாரியான நோர்சுஹாதா அஹ்மட் உதவியுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று நோராசாம் கூறினார். புதிதாகப் பிறந்த குழந்தையும் தாயும் பின்னர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version