Home உலகம் ஆப்கானில் தலிபான்கள் வெறி

ஆப்கானில் தலிபான்கள் வெறி

மத தலைவர்கள், பெண்கள் 33 பேர் சுட்டுக்கொலை

ஆப்கான்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படை வீரர்கள் வெளியேறி வருவதால், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும் பகுதியை அவர்கள் பிடித்து விட்டனர்.

இந்நிலையில், தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைத் தலிபான்கள் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களில் அவர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண், பெண் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட 33 பேரை கொன்றுள்ளனர்.

இதனால், அமெரிக்க படைகள் இருந்த தைரியத்தில் தலிபான்களை எதிர்த்தவர்கள், குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடுகின்றனர்.

இரவு நேர ஊரடங்கு தலிபான்களை தாக்குதல் அதிகமாகி வருவதால், அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் 31  இல் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version