Home உலகம் வானில் தேனிலவு – வாழ்த்த வாரீர்

வானில் தேனிலவு – வாழ்த்த வாரீர்

விண்வெளியில் திருமணம்!

வாழ்க்கையின் முக்கிய தருணமான திருமணத்தை விண்வெளியில் நடத்துவதற்கு வாய்ப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ நிறுவனம், கால்பந்து மைதானம் அளவிலான பலுான் போன்ற ‘கேப்சூல்’ ஒன்றை உருவாக்கி வருகிறது. இது 2024க்குள் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.
இது விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பின், அங்கிருந்தவாறே திருமணம் செய்து கொள்ளலாம். இப்பயணத்துக்கான கட்டணம் ரூ. 93.66 லட்சம். இந்த ‘கேப்சூல்’ கடல் மட்டத்தில் இருந்து 1 லட்சம் அடி (31 கி.மீ.,) உயரம் வரை பறக்க உள்ளது.
சாதாரண பயணிகள் விமானம் என்பது 30 ஆயிரம் – 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இத்திட்டத்தில் பயணிகள் விண்வெளியில் இருந்து பூமியின் அழகை 360 டிகிரி கோணத்தில் ரசிக்கலாம்.
எட்டு பேர் பயணிக்கலாம். இதன் மொத்த பயண நேரம் ஆறு மணி. இதில் புறப்படுதல், தரையிறங்குதல் தலா இரண்டு மணி நேரம்.

மீதி 2 மணி நேரம் விண்வெளியில் இருக்கும். ஏற்கனவே இப்பயணத்துக்கான விற்பனை முடிந்து விட்டது. இருப்பினும் 2025 பயணத்துக்காக பலர் விருப்பத்துடன் பதிவு செய்கின்றனர். சிலர் ஒரு குழுவாக செல்வதற்கும், சிலர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் எனவும் பதிவு செய்துள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக கடந்த ஜூனில் ‘நெப்டியூன் ஒன்’ என்ற சோதனை வாகனம் நாசா கென்னடி விண்வெளி மையம் அருகிலுள்ள ஸ்பேஸ்போர்ட் தளத்தில் இருந்து விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

இந்த கேப்சூல் மணிக்கு 19 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.இதனை புளோரிடாவை சேர்ந்த டாபர் மெக்கலம் – ஜானி பாய்ன்டர் தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இது குறித்து மெக்கலம் கூறுகையில் ‘எங்களுடைய நோக்கம் என்பது ஆயிரம் அல்லது லட்சக்கணக்கானோரை விண்வெளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்வது என்பது அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்வதை போல இருக்கும். பயணக்கட்டணம் என்பது ‘புளு ஆர்ஜின்’ விர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தை விட குறைவு’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version